navamaṇimâlai / நவமணிமாலை

DRAFT — NOT PROOFREAD, FOR EVALUATION PURPOSES ONLY

  1. social {

margin-bottom: 8px; opacity:0.65; filter:alpha(opacity=65); /* For IE8 and earlier */ }

  1. social:hover

{ opacity:1.0; filter:alpha(opacity=100); /* For IE8 and earlier */ } div .plusone, .twitter, .fb-like { font-size: 1px; display: inline-block; } div .fb_reset { display: inline; }

ஸ்ரீ:
ஸ்ரீமந்நிகமாந்த மஹாதேசிகாய நம:
சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

ஸ்ரீமந்நிகமாந்த மஹாதேசிகன் அருளிச்செய்த
ஸ்ரீ தேசிக ப்ரபந்தம்

சீரொன்று தூப்புல் திருவேங் கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழமொழியுள் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு

17. நவமணிமாலை

17.1:
ஒருமதியன்பருளங்க வர்ந்தன
உலகமடங்க வளர்ந்தளந்தன
ஒரிசடையொன்றியகங்கைதந்தன
உரகபடங்களரங்குகொண்டன
தருமமுயர்ந்ததிதென்னநின்றன
தருமனிரந்த திசைந்து சென்றன
சகடமுடைந்து கலங்க வென்றன
தமர்க ளுருந்து மருந்தி தென்பன
திருமகள் செய்ய கரங்களொன்றின
திகழ்து ளவுந்து மனங்க மழ்ந்தன
செழுமணி கொண்ட சிலம்பிலங்கின
சிலைதனிலன் றோரணங்கு மிழ்ந்தன
அருமறையந்த மமர்ந்த பண்பின
அயன்முடி தன்னிலமர்ந்து யர்ந்தன
அருள்தர வெண்ணிய யிந்தைவந்தன
அடியவர் மெய்யர் மலர்ப்பதங்களே.

17.2:
மகரம்வளரு மளவில்பெளவமடைய வுற்றலைத்தனை
வடிவுக மடமென வமர்ந்து கிரிதனைத் தரித்தனை
மலியுமசுரனு மைடந்து வசுதையைப்பெயர்த் தெடுத்தனை
வலிகொளவுணனுடல் பிளந்து மதலை மெய்க்கு தித்தனை
கருமுலக மடியளந்து தமர்மளுக் களித்தனை
பரசுமுனிவன் வடிவுகொண்டு பகைவரைத் துணித்தனை
பணியவிசைவில் தசமுகன்றன் முடுகள் பத்துதிர்த்தனை
படியுமுருவில் வருபிலம்ப வசுரனைத் தகர்த்தனை
நகரிதுவரையென வுகந்துவரை கரத்தெடுத்தனை
நடமொடிய லுபரியில் வந்துநலிவ றுக்கவுற்றனை
நலியுன் வினைகள் செகுமருந்தின் நலமுரைந்த வெற்பினை
நனுகு கருடநதி கிளர்ந்த புனலுகப் பில்வைத்தனை
அகரமுதலவுரை கொள்மங்கை கணவனுக்களித்தனை
யடையும் விந்தை சிறுவனுய்ய வருள்கொடுத்து யர்த்தினை
யடியு மணையு மெனு மனந்தண்டி தொழக்க ளித்தனை
அவனிமருவு திருவயிந்தை யடியவர்க்கு மெய்யனே.

17.3:
புரமுயர்த்த வசுரர்கட்கு ஓர்புறமுரைத்த பொய்யினான்
வரையெடுத்து மழைதடுத்த மழையொடொத்த மெய்யினான்
திரைநிரைத்த கடலெரித்த சிலைவளைத்த கையினான்
அருள்கொடுத்து வினைதவிர்க்கும் அடியவர்க்கு மெய்யனே.

17.4:
தேசொத்தாரில்லையெனும் தெய்வநாயகனார்
வாசக்குழல் மாமலராள் மணவாளர்
வாசித்தெழுமன்மதனார் மணற்றோப்பில்
மாசிக்கடலாடி மகிழ்ந்து வருவாரே.

17.5:
உருளுஞ்சகடமொன்றுதைத்தாய்
உலகமேழு முண்டுமிழ்ந்த ளந்தாய்
பொருளுமழலு மிறையாகப்
பூண்டேன் அடிமையினின் மீண்டேன்
இருளும் மருளுன் தருமந்நாள்
எழிலாராழிசங்கேந்தி
அருளுந்தெருளுன் தரவென்பால்
அடியோர் மெய்ய வந்தருளே.

17.6:
வஞ்சனை செய்த பூதனையை மலியுஞ்சாட்டை
மல்லரையோர் மதகளிற்றை வானோரஞ்சுங்
கஞ்சனை முங்கடிந்தவனி பாரந்தீர்ந்த
காவலனே கோவலனாய் நின்றகோவே
அஞ்சன முங்காயா வுமனையமேனி
அடியவர்க்கு மெய்யனே அயிந்தைவாழும்
மஞ்செனவே யருள்பொழியும் வள்ளலே நின்
வடிவழகு மறவாதார் பிறவாதாரே.

17.7:
மையுமாகட லுமயிலுமா மழையும்
மணிகளுங்கு வளையுங்கொண்ட
மெய்யனே அடியோர் மெய்யனே விண்ணோர்-
ஈசனே நீசனேண்டைந்தேன்
கையு மாழியுமாய்க் களிறு காத்தவனே
காலனார் தமரெனைக் கவராது
இயனே வந்தன்றஞ்ச லென்றருள் தென்
னயிந்தைமா நகர மர்ந்தானே.

17.8:
மஞ்சுலாவு சோலை சூழ யிந்தை மன்னுசீர்
வரையெடுத்து நிரையளித்த மாசில் வாசுதேவனே
செஞ்சொலன்பர் சிந்தை கொண்டு தீதிலாத தூதனாய்த்
தேருமூர்ந்து தேசுயர்ந்த செல்வம் தெய்வ நாயக
வெசொலாளர் காலதூதர் வீசு பாசம் வந்தென்மேல்
விழுந்தழுந்தி யானயர்ந்து வீழ்வதற்குமுன்ன நீ
அஞ்ச லஞ்ச லஞ்ச லென்றளிக்க வேண்டுமச்சுதா
அடியவர்க்கு மருளியக்கு மடியவர்க்கு மெய்யனே.

17.9:
பொருத்தம் பொருந்தலும் போகுந்தவற்றுடன் பொய்ம்மதிமேல்
விருத்தங்கலிதுறை மேவுமழன்மதம் வேறினியென்
திருத்தமனத்தினிற் சேராவெமைத் தெய்வநாயக, நின்
வருத்தம் பொறாவருளால் மன்ண்டைக் கலங்கொண்டருளே.

17.10:
அந்தமில் சீரயிந்தை நகரமர்ந்த நாத
நடியிணைமேல் அடியுரையாலைம்பதேத்திச்
சிந்தைகவர் பிராகிருத நூறு கூறிச்
செழுந்தமிழ் மும்மணிக்கோவை செறியச் சேர்த்தும்
பந்து கழலம்மானை யூசலேசல்
பரவு நவமணி மாலையிவையுஞ்சொன்னேன்
முந்தைமறை மொழிய வழிமொழி நீயென்று
முகுந்தனருள் தந்த பயன் பெற்றேன் நானே.

சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

அடிவரவு: ஒருமதி, மகரம், புரமுயர்ந்த, தேசொத்தார், உருளம், வஞ்சனை
மலியும், மையும், மஞ்சு, பொருத்தம், அந்தமில்சீர், ஆழ்வார்.