aḍaikkalappattu / அடைக்கலப்பத்து

  1. social {

margin-bottom: 8px; opacity:0.65; filter:alpha(opacity=65); /* For IE8 and earlier */ }

  1. social:hover

{

opacity:1.0;
filter:alpha(opacity=100); /* For IE8 and earlier */

} div .plusone, .twitter, .fb-like { font-size: 1px; display: inline-block; } div .fb_reset { display: inline; }

ஸ்ரீ:
ஸ்ரீமந்நிகமாந்த மஹாதேசிகாய நம:
சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

ஸ்ரீமந்நிகமாந்த மஹாதேசிகன் அருளிச்செய்த
ஸ்ரீ தேசிக ப்ரபந்தம்

சீரொன்று தூப்புல் திருவேங் கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழமொழியுள் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு

7. அடைக்கலப் பத்து

7.1:
பத்தி முதலாமவற்றுள் பதி எனக்கு கூடாமல்
எத்திசையும் ஒழன்றோடி இளைத்துவிழும் காகம்போல்
முத்தி தரும் நகரேழில் முக்கியமாம் கச்சிதன்னில்
அத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம் நான் புகுந்தேனே.

7.2:
சடைமுடியன் சதுமுகனென் றிவர்முதலாந் தரமெல்லா
மடையவினைப் பயனாகி யழிந்துவிடும் படிகண்டு
கடிமலராள் பிரியாத கச்சிநக ரத்திகிரி
யிடமுடைய வருளாள ரிணையடிக ளடைந்தேனே.

7.3:
தந்திரங்கள் வேறின்றித் தமதுவழி யழியாது
மந்திரங்க டம்மாலு மற்றுமுள வுரையாலு
மந்தரங்கண் டடிபணிவா ரனைவர்க்கு மருள்புரியுஞ்
சிந்துரவெற் பிறையவனார் சீலமல தறியேனே.

7.4:
காகமிரக் கதன்மன்னர் காதலிகத் திரபந்து
நாகமர னயன்முதலா நாகநக ரார்தமக்கும்
போகமுயர் வீடுபெறப் பொன்னருள்செய் தமைகண்டு
நாகமலை நாயகனார் நல்லடிப்போது அடைந்தேனே.

7.5:
உகக்குமவை யுகந்துகவா வனைத்துமொழிந் துறவுகுண
மிகத்துணிவு பெறவுணர்ந்து வியங்காவ லெனவரித்துச்
சகத்திலொரு புகலிலாத் தவமறியேன் மதிட்கச்சி
நகர்கருணை நாதனைநல் லடைக்கலமா யடைந்டேனே.

7.6:
அளவுடையா ரடைந்தார்க்கு மதனுரையே கொண்டவர்க்கும்
வளவுரைதந் தவனருளே மன்னியமா தவத்தோர்க்குங்
களவொழிவா ரெமரென்ன விசைந்தவர்க்குங் காவலராந்
துளவமுடி யருள்வரதர் துவக்கிலெனை வைத்தேனே.

7.7:
உமதடிக ளடைகின்றே ண்னென்றொருகா லுரைத்தவரை
யமையுமினி யென்பவர்போ லஞ்சலெனக் கரம்வைத்துந்
தமதனைத்து மவர்தமக்கு வழங்கியுந்தா மிகவிளங்கு
மமைவுடைய வருளாள ரடியிணையை யடைந்தேனே.

7.8:
திண்மைகுறை யாமைக்கு நிறைகைக்குந் திஇவினையா
லுண்மைமற வாமைக்கு முளமதியி லுகக்கைக்குந்
தண்மைகழி யாமைக்குந் தரிக்கைக்குந் தணிகைக்கும்
வண்மையுடை யருளாளர் வாசகங்கள் மறவேனே.

7.9:
சுரிதிநினை விவையறியுந் துணிவுடையார் தூமொழிகள்
பரிதிமதி யாசிரியர் பாசுரஞ்சேர்ந் தருக்கணங்கள்
கருதியொரு தெளிவாளாற் கலக்கமறுத் தத்திகிரிப்
பரிதிமதி நயனமுடை பரமண்டி பணிந்தேனே.

7.10:
திருமகளுந் திருவடிவுந் திருவருளுந் தெள்ளரிவு
மருமையிலா மையுமுறவு மளப்பரிய வடியரசுங்
கருமமழிப் பளிப்பமைப்புங் கலக்கமிலா வகைநின்ற
வருள் வரதர் நிலையிலக்கி லம்பெனநா னமிழ்ந்தேனே.

7.11:
ஆறுபயன் வேறில்லா வடியவர்க ளனைவர்க்கு
மாறுமதன் பயனுமிவை யொருகாலும் பலகாலு
மாறுபய ண்னெனவேகண் டருளாள ரடியிணைமேற்
கூறியநற் குணவுரைக ளிவைபத்துங் கோதிலவே.

சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

அடிவரவு: பத்தி, சடைமுடியன, தந்திரங்கள்,
காகம், உகக்கும், அளவுடையார், உமதடிகள், சுருதி,
திருமகள், ஆறுபயன, அமலன்.